உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தம்பதி உள்பட 4 பேர் மாயம்

தம்பதி உள்பட 4 பேர் மாயம்

கோபி: கோபி அருகே அளுக்குளியைசேர்ந்தவர் கதிர்வேல், 42, கூலி தொழிலாளி; இவரின் மனைவி, செல்வி, 35; இருவரும் கடந்த, 18ம் தேதி முதல் காணவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கதிர்வேல் மகன் ஜெகநாதன் புகாரின்படி, கடத்துார் போலீசார் தம்பதியை தேடி வருகின்றனர்.* கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த பெரியசாமி மகள் ராஜகுமாரி, 20; சத்தி அருகே இண்டியம்பாளையத்தில் மில்லில் தங்கி வேலை செய்கிறார். நேற்று முன்தினம் உடல் நிலை சரியில்லை என தந்தைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனால் மகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சத்தியமங்கலத்துக்கு பெரியசாமி வந்தார். பஸ் ஸ்டாண்டில் காத்திருப்பதாக கூறிய மகளை காணவில்லை. அவர் புகாரின்படி சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.* ஈரோடு, கஸ்பாபேட்டை, செங்கரை பாளையம் சேட்டு-வெங்கடேஸ்வரி தம்பதி மகள் கீதாஞ்சலி, 16; எட்டாண்டுக்கு முன் சேட்டு பிரிந்து சென்று விட்டார். பெருந்துறையில் பனியன் கம்பெனிக்கு வெங்கடேஸ்வரி வேலைக்கு செல்கிறார். கஸ்பாபேட்டையில் அரசு பள்ளியில் கீதாஞ்சலி, 10ம் வகுப்பு படிக்கிறார். கடந்த, 17ம் தேதி காலை வீட்டில் தனியாக இருந்த கீதாஞ்சலி மாயமானார். தாய் புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை