உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காட்டுக்குள் செயல்பட்ட நிறுவனத்தில் தடை செய்த 4 டன் பிளாஸ்டிக் பறிமுதல்

காட்டுக்குள் செயல்பட்ட நிறுவனத்தில் தடை செய்த 4 டன் பிளாஸ்டிக் பறிமுதல்

ஈரோடு, அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த, ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக பிளாஸ்டிக் கவர் தயாரிப்பு, விற்பனை செய்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.மாநகராட்சி ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட கொளத்துப்பாளையத்தில், காட்டுப்பகுதியில் செயல்படும் நிறுவனத்தில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் தயாரிப்பதாக தகவல் கிடைத்தது. சுகாதார அலுவலர் பூபாலன், சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர், மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் சேர்ந்து, அந்த நிறுவனத்தில் நேற்று சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் தயாரித்து, பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருவது கண்டறியப்பட்டது. குடோனில் விற்பனைக்கு அனுப்ப வைத்திருந்த, 4,050 கிலோ எடையிலான, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கொளத்துப்பாளையம் அருகில் காட்டுப்பகுதியில், சாமுண்டி பாலி பேக் பெயரில் பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டது.உரிமையாளர் நேபாராமுக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளோம். அடுத்தகட்ட நடவடிக்கைகளை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மேற்கொள்வர். மீண்டும் பிடிபட்டால், 50,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ