மேலும் செய்திகள்
2 நாளில் 42,273 வாக்காளர்களுக்கு படிவம் வழங்கல்
07-Nov-2025
ஈரோடு, ஈரோடு மேற்கு தொகுதியில், 3 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு முழு அளவில், சிறப்பு தீவிர திருத்தப்பணியில் வாக்காளர் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டதாக, தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெற்று, தேர்தல் ஆணைய செயலியில் பதிவேற்றம் செய்யும் பணியும் மறுபுறம் தீவிரமாக நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த வகையில் நேற்று வரை, 50,000 விண்ணப்ப படிவங்கள் திரும்ப பெறப்பட்டு, பதிவேற்றும் பணி தொடங்கி விட்டது என்கின்றனர்.வாக்காளர் கவனத்துக்குஎஸ்.ஐ.ஆர்., படிவத்தை பூர்த்தி செய்யும் வாக்காளர்கள், பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என, தேர்தல் ஆணையத்தின் voters.eci.gov.inஎன்ற முகவரியில் உறுதி செய்து கொள்ளலாம். மேலும், 2002ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலை, பி.டி.எப்., வடிவிலும், ஒரு ஓட்டுச்சாவடியின் முழு வாக்காளர் பட்டியலையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
07-Nov-2025