உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வீட்டுமனை கோரி 5,494 மனு

வீட்டுமனை கோரி 5,494 மனு

ஈரோடு, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு செயலர் மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:ஈரோடு மாநகர பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய சிறுபான்மையினரிடம், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலக்குழு, பிற அமைப்பு சார்பில் இலவச வீட்டுமனைக்காக மனுக்கள் பெறப்பட்டன. பி.பெ.அக்ரஹாரம், மரப்பாலம், கருங்கல்பாளையம் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மனு பெறப்பட்டன.கடந்த நான்கு வாரமாக, 1,500, 1,501, 1,500 மற்றும் நேற்று, 993 மனுக்கள் என, 5,494 மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் தகுதியான நபர்கள் என்பதற்கான ஆவணங்கள், சான்றுகளை வழங்கியுள்ளோம். இவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினால் வாழ்வாதாரம், வேலை பாதிக்காது.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ