உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு மாவட்டத்தில் 7 பி.டி.ஓ.,க்கள் இடமாற்றம்

ஈரோடு மாவட்டத்தில் 7 பி.டி.ஓ.,க்கள் இடமாற்றம்

ஈரோடு:சட்டசபை தேர்தல் நிறைவு பெற்ற நிலையில், ஈரோடு மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நிர்வாக காரணத்துக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதன்படி, ஈரோடு கலெக்டர் அலுவலக மேலாளர் (வளர்ச்சி) எஸ்.மாதேஸ்வரன் - நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) அலுவலராகவும், நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) கே.கண்ணன் - நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) பணிக்கும், ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி.வி.ஆனந்தன் - கோபி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.,) பணிக்கும், சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.,) கு.மா.ராதாமணி - கோபி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ.,) பணிக்கும், கோபி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ.,) வி.சுமித்ரா - மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.,) பணியிடத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ.,) எம்.அர்த்தநாரீஸ்வரன் - சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.,) பணிக்கும், சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ.,) வி.எஸ்.விஜயலட்சுமி - சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.,) பணியிடத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளவர்கள், உடனடியாக புதிய பணியிடத்தில் பணியேற்பு செய்ய வேண்டும் என, கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை