மேலும் செய்திகள்
'பின்டெக் சிட்டி'யில் ஏக்கர் ரூ.65 கோடிக்கு ஏலம்
20-Jun-2025
ஈரோடு, ஈரோடு, மூலக்கரையை சேர்ந்தவர் நாராயணசாமி, 75; ஈரோடு டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம், நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:எனது முதல் மனைவி சிவகாமிக்கு ஒரு மகன் உள்ளார். திருமணமான எட்டு ஆண்டில் அவர் பிரிந்து விட்டார். மகனை நான் வளர்த்தேன். பூங்கொடி என்பவரை இரண்டாவது திருமணம் செய்தேன். இவருக்கு ஒரு மகள் உள்ளார். மகன், மகளுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டேன். இரண்டாவது மனைவியும் பிரிந்ததால் தனியாக வசிக்கிறேன்.எனது, 4.5 ஏக்கர் நிலம் பஞ்சாயத்தார் முன்னிலையில் பேசி பாகப்பிரிவினை செய்யப்பட்டது. அப்போது மகனுக்கு, 2.5 ஏக்கர், எனக்கும், மகளுக்கும் தலா, ஒரு ஏக்கர் என முடிவு செய்யப்பட்டது.தற்போது என்னை மகன், மகள் இருவரும் கவனிக்கவில்லை. தவிர உயிலில் எனக்கு எழுதப்பட்ட நிலம், மகனுக்கு செல்லும் வகையிலும், வேறு சில குறைபாடுடன் மோசடியாக பத்திரம் பதிவு செய்து விட்டார். மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டப்படி, எனது மகன் ஏமாற்றி எழுதி பதிவு செய்த குடும்ப பாகன சாசனத்தை ரத்து செய்து, எனக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
20-Jun-2025