உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வம்புக்கு இழுத்து தகராறு; 8 மாணவர்கள் கைது

வம்புக்கு இழுத்து தகராறு; 8 மாணவர்கள் கைது

ஈரோடு, பெருந்துறை காடாபாளையத்தை சேர்ந்த ஜெயபால் மகன் துளசிராமன், 19; கடந்த, 2023ல் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்தார். பள்ளக்காட்டூரை சேர்ந்த பாலச்சந்திரன் மகன் ரோகித், 19; இவரும் அதே பள்ளியில் படித்தார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அதன் பின் பேசி கொள்ளவில்லை.தற்போது இருவரும் பெருந்துறையில் வெவ்வேறு கல்லுாரியில் படிக்கின்றனர்.துளசிராமன் தனது நண்பர்களான, லோகேஷ், 21. வீரமணி, 25. சிவபிரகாஷ், 19, ஆகியோருடன், பெருந்துறை புது பஸ் ஸ்டாண்டில் கடந்த, 10ம் தேதி நின்றிருந்தார்.அப்போது ரோகித் தனது கல்லுாரி நண்பர்களுடன் வந்தார். இளம்சிறார் ஒருவர் துாண்டுதலின் பேரில் துளசிராமனுடன் ரோகித் தகராறில் ஈடுபட்டுள்ளார்.இதை லோகேஷ், வீரமணி, சிவபிரகாஷ் தடுக்க முயல, ஆத்திரமடைந்த ரோகித்தின் நண்பர்கள், மூவரையும் கட்டையால் தாக்கினர். காயமடைந்த மூவரும் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.பெருந்துறை போலீசில் துளசிராமன் அளித்த புகாரின்படி, ரோகித் உள்பட ஒன்பது பேர் மீது வழக்குப்பதிந்து, அனைவரையும் கைது செய்தனர்.இதில் ஒருவர் மைனர் என்பதால், கோவை இளம் சிறார் நீதி குழுமத்தில் அவரை அடைத்தனர். மற்ற எட்டு பேரும் பெருந்துறை கிளை சிறையில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ