ரூ.2,000 நோட்டுகள் 98 சதவீதம் திரும்பியது
பொதுமக்களிடம் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டு-களில், 98 சதவீதம் திரும்ப பெறப்பட்டு உள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.கடந்த 2023, மே 19ம் தேதி புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அப்-போது, புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 3.56 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதாவது: அக்டோபர் 31ம் தேதி நிலவரப்படி, பொதுமக்களிடம் புழக்கத்-தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில், கிட்டத்தட்ட 98.04 சதவீ-தம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளது. இன்னும் 6,970 கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 நோட்டுகள் மக்களிடம் உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.