உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேன் மோதி சாய்ந்த மின் கம்பம் உடைந்தால் உயிரை காவு வாங்கும்

வேன் மோதி சாய்ந்த மின் கம்பம் உடைந்தால் உயிரை காவு வாங்கும்

கோபி, கோபி அருகே பாரியூர் பஸ் ஸ்டாப்பை கடந்து, கோபியை நோக்கி சென்ற ஒரு ஆம்னி வேன், சாலையோர மின் கம்பத்தின் மீது, ௧௦ நாட்களுக்கு முன் மோதியது. இதில் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். அதேசமயம் கம்பத்தின் அடிப்பகுதி சேதமாகி ஒரு புறம் சாய்ந்தபடி நிற்கிறது. கம்பத்தின் வழியே சென்ற மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால், அடுத்தடுத்து நான்கு கம்பங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் பாரியூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், கூகலுார் கிளை வாய்க்கால் வரை இருட்டில் பயணிக்க வேண்டியுள்ளது. சாய்ந்தபடி நிற்கும் மின்கம்பத்தை சீரமைக்க, மின் வாரியம் ஏனோ ஆர்வம் காட்டவில்லை. தற்போது பலத்த காற்றுடன் மழை பெய்யும் சூழலில், கம்பம் சாய்ந்தால் அத்தாணி சாலை குறுக்கே செல்லும் பிரதான மின் கம்பியால் பலரை காவு வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. வரும் முன் காக்குமா? வந்த பின் பதறுமா மின் வாரியம்?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ