மேலும் செய்திகள்
அரசு அதிகாரிகளின் டிரைவர் இடமாற்றம்
05-Mar-2025
ஈரோடு: பவானி அருகேயுள்ள காளிங்க ராயன்பாளையம், எம்.ஜி.ஆர்., வீதியை சேர்ந்தவர் நல்லசாமி, 44; ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., ஜவகரிடம் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:நான் வெல்டிங் தொழிலாளி. கடந்த, 4ல் வணிகவரித்துறை அலுவலகத்தில் இருந்து என் வீட்டுக்கு வந்த சிலர், நான் செய்யும் தொழிலுக்கு வணிக வரித்தொகை பல லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது. அதை செலுத்துமாறு அறிவுறுத்தி சென்றனர். அதிர்ச்சி அடைந்த நான், வணிக வரித்துறை அலுவலகத்துக்கு சென்றேன். எனது ஆதார் கார்டு, பான் கார்டு, மின் கட்டண ரசீது, புகைப்படத்தை கொடுத்து, ஜி.எஸ்.டி., எண் பெற்று, என் பெயரில் போலி நிறுவனம் நடத்தியது தெரியவந்தது. எனக்கும் அந்த நிறுவனத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை. இதுகுறித்து வணிகவரித்துறை அலுவலகத்தில் விளக்க கடிதமும் கொடுத்துள்ளேன். எனது முக்கிய ஆவணங்களை திருடி போலி நிறுவனம் நடத்திய, மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
05-Mar-2025