மது போதையில் கீழே விழுந்தபனியன் தொழிலாளி உயிரிழப்பு
கோபிதிங்களூர் அருகே, வீட்டு வாசலில் நிலை தடுமாறி போதையில் கீழே விழுந்த பனியன் கம்பெனி தொழிலாளி பலியானார்.திங்களூர் அருகே நெசவாளர் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, 59. பனியன் கம்பெனி தொழிலாளி; இவரது மனைவி, வசந்தி, 53. தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. மதுபோதையில் இருந்த கிருஷ்ணசாமி கடந்த, 9ம் தேதி இரவு, 8:20 மணிக்கு தனது வீட்டு வாசலில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், முகம் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது. சிகிச்சை பலனின்றி பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் கிருஷ்ணசாமி இறந்தார்.இதுகுறித்து அவரது மனைவி வசந்தி கொடுத்த புகாரின்படி, திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.