உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மலைத்தேனீக்கள் கட்டிய கூடு: மக்களுக்கு காத்திருக்கு ஆபத்து

மலைத்தேனீக்கள் கட்டிய கூடு: மக்களுக்கு காத்திருக்கு ஆபத்து

கோபி: கொடிவேரி தடுப்பணை வளாகத்தில் உள்ள அரச மரத்தில், மலைத்தேனீக்கள் கூடு கட்டியுள்-ளதால் ஆபத்து காத்திருக்கிறது.கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வளா-கத்தில், தடப்பள்ளி வாய்க்காலின் தலைமதகு உள்ளது. அதன் அருகேயுள்ள அரச மரத்தின் கிளையில், மலைத்தேனீக்கள் கூடு கட்டியுள்ளது. தினமும் அந்த கிளையின் அடிப்பகுதியில், சுற்-றுலா பயணிகள் வந்து அமர்ந்திருப்பதால் ஆபத்து காத்திருக்கிறது. எந்த நேரமும் அந்த மலைத்தேனீக்கள் கூடு கலைந்து விடும் சூழல் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நீர்வள ஆதாரத்-துறையினர், தேனீக்கள் கூட்டை முறையாக அகற்ற வேண்டும் என, அங்கு வரும் சுற்றுலா பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ