உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நின்ற அரசு டவுன் பஸ் மீது மோதிய பிக்-அப் வாகனம்

நின்ற அரசு டவுன் பஸ் மீது மோதிய பிக்-அப் வாகனம்

புன்செய்புளியம்பட்டி, புன்செய் புளியம்பட்டியில் இருந்து, 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பண்ணாரிக்கு, பி-௧ அரசு டவுன் பஸ் நேற்று மதியம் சென்றது. பனையம்பள்ளி நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு கொண்டிருந்தபோது, பின்னால் வந்த பிக் அப் வாகனம் பின்புறத்தில் மோதியது. இதில் பிக் அப் வாகனத்தின் முன் பகுதி, பஸ்சின் பின்புறம் சேதமடைந்தது. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து புன்செய் புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி