உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / திறந்தவெளி பாராக மாறிய நடைபாதை

திறந்தவெளி பாராக மாறிய நடைபாதை

ஈரோடு ஈரோடு மாநகராட்சி ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட எல்லப்பாளையத்தில், 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு மாநகராட்சி சார்பில் அம்ரூத் திட்டத்தில், 60 லட்சம் ரூபாய் மதிப்பில் குளத்தை மேம்படுத்தி, நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் இருபுறமும் பேவர் பிளாக் கற்களால் நடைபாதை அமைக்கப்பட்டது. மக்களும் நடைபயிற்சி மேற்கொண்டனர். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் நடைபாதை புதர்மண்டி கிடக்கிறது. இரவில் திறந்தவெளி பாராக, குடிமகன்கள் பயன்படுத்துவதாக, அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதுபற்றி மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும் கண்டு கொள்ளவில்லை. இதனால் நடைபயிற்சிக்கு தற்காலிகமாக கொடுத்த ஓய்வு, நிரந்தரமாகி விட்டதாகவும், வேதனை தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை