உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பைக் மீது லாரி மோதிவாலிபர் பரிதாப பலி

பைக் மீது லாரி மோதிவாலிபர் பரிதாப பலி

ஈரோடு:ஈரோடு அருகே லாரி---பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.சேலம் மாவட்டம், ஓமலுாரை சேர்ந்தவர் ராஜா, 37. நேற்று முன்தினம் ஈரோடு அடுத்த பரிசல் துறை அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக, ராஜா பைக் மீது மோதியது. விபத்தில் ராஜா பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மொடக்குறிச்சி போலீசார், விபத்தில் உயிரிழந்த ராஜாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான நாமக்கல் மாவட்டம் ஓடப்பள்ளியை சேர்ந்த கணேசன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி