உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாக்காளர் சிறப்பு முகாமில் 5,697 படிவங்கள் ஏற்பு

வாக்காளர் சிறப்பு முகாமில் 5,697 படிவங்கள் ஏற்பு

ஈரோடு; ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளிலும் கடந்த, 21, 22ல் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கு முறை திருத்த முகாம் நடந்தது.இதில் புதிய வாக்காளர் பெயர் சேர்ப்புக்காக படிவம்-6ன் மூலம், 2,528 விண்ணப்பம்; பெயர் சேர்க்கைக்கு ஆட்சேபணை, ஏற்கனவே உள்ள பெயரை நீக்க கோரிய படிவம்-7ன் மூலம், 838 விண்ணப்பம்; குடியிருப்பு இடமாற்றம், பட்டியல் விபர திருத்தம், மாற்று வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி விபர குறியீட்டுக்கு, 2,331 பேர் என, 5,697 படிவங்கள் பெறப்பட்டன. இம்மூன்று படிவங்களும் சேர்த்து தொகுதி வாரியாக, ஈரோடு கிழக்கு-476, ஈரோடு மேற்கு-696, மொடக்குறிச்சி-725, பெருந்துறை-739, பவானி-731, அந்தியூர்-712, கோபி-909, பவானிசாகர்-709 என விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டு, பரிசீலனையில் உள்ளன.இப்படிவங்கள் உரிய விசாரணைக்கு பின், இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்குதல், திருத்தமாக மேற்கொள்ளப்படும். வாக்காளர் சேவைகள் தொடர்பான கூடுதல் விபரத்தை, 1950 என்ற வாக்காளர் உதவி எண்ணில் அறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ