மேலும் செய்திகள்
முதல்வர் விஜய் ஆட்சியின் 100 நாள் ரிப்போர்ட்!
09-Aug-2026
புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர் யூனியன், நல்லுார் பஞ்., கிராம சபை கூட்டம், நல்லுார் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துசாமி தலைமையில் நடந்தது.ஊராட்சி செயலர் சம்பத் முன்னிலை வகித்தார். நல்லூர் பஞ்.,க்கு உட்பட்ட மக்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டு, வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக அறிக்கை வாசிக்கப்பட்டன. பெண்கள் பேசுகையில், 'மகளிர் உரிமை தொகைக்கு கடந்த, தி.முக ஆட்சியில் விண்ணப்பித்தும், பல காரணங்களை சொல்லி நிராகரித்து விட்டனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதனை தொடர்ந்து சுகாதாரம், போதை பொருள் தடுப்பு, ஹெச் ஐ வி.,பாதிப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.
09-Aug-2026