சென்னிமலையில் சாலைகளில்நடமாடும் ஆடுகளால் விபத்து
சென்னிமலையில் சாலைகளில்நடமாடும் ஆடுகளால் விபத்து சென்னிமலை, டிச. 14-சென்னிமலை நகரில் எங்கு பார்த்தாலும் ஆடுகள் சுற்றி திரிகின்றன. நடுரோட்டில் படுத்துக் கொள்வதும் சகஜமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தினமும் பரிதவிக்கும் நிலை தொடர்கிறது. சில நேரங்களில் ஆவேசமாகும் ஆடுகள் மனிதர்களை முட்டி தள்ளுவதும் நிகழ்கிறது. ரோடுகளில் திரியும் ஆடுகளால் விபத்தும் நடக்கிறது. இதை கட்டுப்படுத்த வேண்டிய பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறது. சாலைகளில் திரியும் ஆடுகளை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.