உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.10 நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை; கலெக்டர்

ரூ.10 நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை; கலெக்டர்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும், தங்களிடம் வரப்பெறும் இந்திய அரசால் வெளியிடப்பட்ட, 10 ரூபாய் நாணயங்களை பெறுவதற்கு மறுக்கக்கூடாது. சட்டப்பூர்வமான நாணயங்களை ஏற்க மறுப்பது சட்டத்துக்கு எதிரானது. எனவே பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், வங்கிகள் தங்களுக்கு எவரிடமிருந்து வரப்பெறும், 10 ரூபாய் நாணயங்களை மறுக்காமல் பெற்று கொள்ள வேண்டும் என்று, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கேட்டு கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !