நந்தா மருத்துவ கல்லுாரியில் நிர்வாகிகள் பொறுப்பேற்பு
ஈரோடு, ஈரோடு ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையில் செயல்பட்டு வரும் நந்தா கல்வி குழுமத்தில், மூன்றாம் தலைமுறையினரான மருத்துவர் என்.சூரியபிரசன்னா மற்றும் மருத்துவர் என்.சுதீக்சா உறுப்பினர்களாக அதிகாரபூர்வமாக இணைந்தார்கள். இருவருக்கும் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் வாழ்த்து தெரிவித்தார். இதற்கான விழாவை ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை அங்கத்தினர் பானுமதி சண்முகன் துவக்கி வைத்தார்.விழாவில் ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி, நந்தா மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை புல முதல்வர் சந்திரபோஸ் மற்றும் துணை மருத்துவ கல்லுாரி முதல்வர்கள் கலந்து கொண்டனர். விழா நிறைவில், தங்கள் குறிக்கோள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை சூரியபிரசன்னா மற்றும் சுதீக்சா பகிர்ந்து கொண்டு நன்றி தெரிவித்தனர்.