உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அ.தி.மு.க., பொது செயலாளர் பிறந்த நாளையொட்டி வழிபாடு

அ.தி.மு.க., பொது செயலாளர் பிறந்த நாளையொட்டி வழிபாடு

ஈரோடு, தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க., பொது செயலாளருமான பழனிசாமியின், 71வது பிறந்தநாளையொட்டி, அ.தி.மு.க., புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில், ஈரோடு வ.உ.சி., பூங்காவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு, மாணவரணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க., புரட்சித்தலைவி அம்மா பேரவை மாநில துணை செயலாளர் வீரக்குமார் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை