உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

ஈரோடு: அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, ஈரோடு பன்னீர்-செல்வம் பூங்கா வளாகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து நேற்று மரியாதை செலுத்தினர். தி.மு.க., சார்பில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார், முன்னாள் எம்.பி., கந்-தசாமி, மாநகர செயலாளர் சுப்பிரமணியம், நிர்வாகிகள் சச்சிதா-னந்தம், சசிகுமார், ராமசந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.* அ.தி.மு.க., சார்பில், மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலை-மையில், முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு, மாவட்ட மாணவ-ரணி செயலாளர் ரத்தன் பிரத்வி, பகுதி செயலாளர்கள் கேசவ-மூர்த்தி, ராமசாமி, பாலாஜி துரைராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து பல்வேறு அமைப்பினர் மரியாதை செலுத்தினர்.* சத்தியமங்கலத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில், மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தலைமையில் அம்பேத்கர் உருவப்ப-டத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கட்சி பொது செயலாளர் கோவை ரவிக்குமார், மேற்கு மண்டல அமைப்பு செயலாளர் சபாபதி உள்பட, 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.* டி.என்.பாளையத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணி, டி.என்.பாளையம் ஒன்றிய பொருளாளர் சவுந்தர்ராஜன் தலைமை-யிலும், நம்பியூரில் ஈரோடு வி.சி., மேற்கு மாவட்ட செயலாளர் தங்கவேல் தலைமையிலும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.* ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் சார்பில், மாநகராட்சி ஊழியர், துாய்மை பணியாளர்களுக்கு, விருந்து அளிக்கப் பட்டது. இதில் அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், ஆணையர் மணீஷ் உள்-ளிட்டோர் கலந்து கொண்டனர்.* பவானியில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், பவானி தாலுகா தலைவர் பன்னீர் செல்வம்; பவானி அடுத்த பெரியபுலியூரில், வி.சி., மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன் ஆப்பக்கூடலில் வி.சி., சார்பில், பேரூர் பாசறை துணை அமைப்பாளர் கிங்ஸ்லி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயராஜ், உள்ளிட்ட பலர், அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மரி-யாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ