உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அங்கன்வாடி மையம் திறப்பு

அங்கன்வாடி மையம் திறப்பு

புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி நகராட்சி போலீஸ் ஸ்டேஷன் அருகே செயல்படும் நகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தில், 17.50 லட்சம் ரூபாய் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நகராட்சி கமிஷனர் கருணாம்பாள் தலைமையில் நேற்று நடந்தது. பவானிசாகர் எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வி திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !