மேலும் செய்திகள்
சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு
16-Oct-2024
பிரதோஷ வழிபாடு: பக்தர்கள் பரவசம்
30-Oct-2024
மகுடேஸ்வரருக்கு அன்னாபிஷேகம்கொடுமுடி, நவ. 15- கொடுமுடி மகுடேஸ்வரர், வீர நாராயண பெருமாள் கோவிலில், அன்னாபிஷேக விழா நேற்று நடந்தது. மதியம் சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து, மூலவருக்கு அன்னத்தில் அலங்காரம் செய்யப்பட்டது. மாலை, 5:௦௦ மணி முதல் அன்னாபிஷேகத்தில் மகுடேஸ்வரர் அருள்பாலித்தார். இரவில் மூலவருக்கு சாத்தப்பட்ட அன்னம், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து ரிஷப வாகனத்தில் உமா மகேஸ்வரர் சுவாமிக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா நடந்தது. அன்னத்தால் செய்யப்பட்ட சிரசு பாகம் காவிரி நதியில் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் மகுடேஸ்வரருக்கு ருத்ராபிஷேகம், தீபாராதனை நடந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
16-Oct-2024
30-Oct-2024