நடந்தது.ஏ.டி.எம்.,மில் கள்ளநோட்டுமேலும் ஒருவர் கைது
ஈரோடு:சிவகிரியில் உள்ள ஐ.ஓ.பி., வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தில், கள்ள நோட்டு இருப்பதாக வங்கி கிளை மேலாளர் குட்டிக்கண்ணனுக்கு தகவல் வந்தது. அவர் ஆய்வு செய்தபோது, 4,500 ரூபாய்க்கு கள்ளநோட்டு இருப்பது தெரியவந்தது. அவர் புகாரின்படி சிவகிரி போலீசார் விசாரித்தனர். இதில் சிவகிரிஸ எஸ்.பி.எஸ்., தெரு, மூங்கில் வியாபாரி ராமு, 50, என்பவரை கைது செய்தனர். அவருக்கு கள்ளநோட்டை வழங்கிய, அந்தியூர் தாலுகா பர்கூர்மலையை சேர்ந்த சக்திவேல், 37, என்பவரை தேடி வந்தனர். இந்நிலையில் அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.