கொங்கு வேளாளர் பாலிடெக்னிக்கில் பணி நியமன ஆணை வழங்கும் விழா
பெருந்துறை :பெருந்துறை அடுத்த சீனாபுரம் கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லுாரியில் படித்து, பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பணி நியமனம் ஆணை வழங்கும் விழா நடந்தது. கல்லுாரி தாளாளர் முத்துசாமி விழாவை துவக்கி வைத்தார். முதல்வர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். கல்லுாரி வேலை வாய்ப்பு அதிகாரி தமிழரசி வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக மேட்டூர் அனல்மின் நிலைய உதவி பொறியாளர் ரவிசந்திரன் கலந்து கொண்டு, பணி நியமன உத்திரவை வழங்கினார். விழாவில், 60 மேற்பட்ட நிறுவனங்களில், 549 ஆணை பெறப்பட்டு, 280 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. நிறைவில் கம்ப்யூட்டர் துறை தலைவர் மேகலா நன்றி கூறினார்.