உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 2 ஓட்டு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு

2 ஓட்டு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 2 ஓட்டு எண்ணும் மையங்களில் இன்று, 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளிலும் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. இன்று மாலை ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் ஓட்டு பெட்டிகள், ஓட்டு எண்ணும் மையங்களான சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லுாரி, கோபி கலை அறிவியல் கல்லுாரிக்கு கொண்டு சென்று பாதுகாக்கப்படும். மே 4 வரை மூன்று அடுக்கு பாதுகாப்பில் ஸ்டாங் ரூமில் பதிவான ஓட்டு பெட்டிகள் இருக்கும். சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லுாரியில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, பெருந்துறை, அந்தியூர் சட்டசபை தொகுதி ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், கோபி கலை அறிவியல் கல்லுாரியில் பாவனிசாகர், கோபி சட்டசபை தொகுதி ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் வைக்கப்படும். இதற்காக இன்று காலை முதல் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. ஒவ்வொரு ஓட்டு எண்ணும் மையத்துக்கும் மாவட்ட போலீசார் 60 பேர், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பிரிவை சேர்ந்த 140 பேர், துணை ராணுவப்படை பிரிவினர் 60 பேர் பணியில் இருப்பர். இவர்கள் அனைவரும் சுழற்சி முறையில் பணி செய்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை