உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சட்டசபை தேர்தல் பாதுகாப்பு 91 சி.ஐ.எஸ்.எப்., வீரர் வருகை

சட்டசபை தேர்தல் பாதுகாப்பு 91 சி.ஐ.எஸ்.எப்., வீரர் வருகை

ஈரோடு: தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு, ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தேர்தல் பாதுகாப்பு பணிக்கு, மத்திய துணை ராணுவ படை வீரர்களை (சி.ஐ.எஸ்.எப்.,), தேர்தல் கமிஷன் தற்போதே அனுப்பி வைக்க தொடங்கியுள்ளது. இதன்படி முதற்கட்டமாக, 50 கம்பெனி துணை ராணுவ படை வீரர்கள், ஈரோட்டுக்கு நேற்று வந்தனர். மும்பையில் இருந்து அதிகாலையில் ரயிலில் இன்ஸ்பெக்டர் தலைமையில், 91 பேர் வந்தனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள். அனைவரும் கோபி பாரியூர் கோவில் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் அறி-விப்பு வெளியான பின், சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பு உள்-ளிட்ட பல்வேறு பணிகளில், இவர்கள் ஈடுபடுத்தப்படுவர் என்று, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !