சட்டசபை மதிப்பீட்டுக்குழு ஈரோடு மாவட்டம் வருகை
ஈரோடு: வேடச்சந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் தலை-மையிலான சட்டசபை மதிப்பீட்டுக்குழு, ஈரோடு மாவட்டத்துக்கு நாளை வருகை தந்து, வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்ய உள்ளனர். குழுவில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்ன-ரசு, எம்.எல்.ஏ.,க்கள்செல்வபெருந்தகை, நந்த-குமார், அம்பேத்குமார், அருண்குமார், உதயசூ-ரியன், கருமாணிக்கம் உட்பட, 19 பேர் பங்கேற்-கின்றனர். மாவட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்து, சட்டச-பையில் அறிக்கை தாக்கல் செய்வர்.