உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போஸ்ட் மாஸ்டருக்கு தொல்லை ஜோதிடர் கைது

போஸ்ட் மாஸ்டருக்கு தொல்லை ஜோதிடர் கைது

அந்தியூர்:பெண் போஸ்ட் மாஸ்டருக்கு, தொந்தரவு கொடுத்த ஜோதிடர் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம், ஒலகடத்தைச் சேர்ந்தவர் ஷமாமா, 21. இவர், முரளி கிளை போஸ்ட் மாஸ்டர். சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் சண்முகம், 63; ஜோதிடர். இவர், முரளி போஸ்ட் ஆபீஸ் கிளையில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். ஷமாமாவிடம் மொபைல் போன் எண்ணை வாங்கிய சண்முகம், அவரிடம் ஆபாசமாக பேசியுள்ளார். மேலும், ஷமாமாவை பற்றி தரக்குறைவாகவும், ஆபாசமாகவும், உயரதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தொடர்ந்து, தொந்தரவு செய்து வந்த சண்முகம் மீது நடவடிக்கை எடுக்குமாறு, வெள்ளித்திருப்பூர் போலீசில் ஷமாமா நேற்று புகாரளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், சண்முகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை