உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நலமான பெண்கள் குறித்து விழிப்புணர்வு

நலமான பெண்கள் குறித்து விழிப்புணர்வு

ஈரோடு :அந்தியூர் தாலுகா, அத்தாணி வட்டாரம், எண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 'நலமான பெண்கள் வளமான குடும்பம்' என்ற இயக்கம் சார்பில், விழிப்புணர்வு மற்றும் காசநோய் கண்டறிதல் முகாம் நடந்தது.காசநோய் பரவும் விதம், அறிகுறி, சிகிச்சை முறைகள், சிறந்த குடும்பம் அமைய பெண்களின் ஆரோக்கியம், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி பயன், ஊட்டச்சத்து உணவு எடுத்து கொள்வதன் அவசியம், புகையிலை பொருட்களின் தீங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், டாக்டர்கள் சதீஷ்குமார், சரவணபிரபு, மேற்பார்வையாளர் சண்முகவடிவு, சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.முகாமில் பங்கேற்ற, 100க்கும் மேற்பட்டோருக்கு காசநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்க செய்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். அனைவருக்கும் நெஞ்சக ஊடுகதிர் பட பரிசோதனை, சளி பரிசோதனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை