உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாராபுரத்தில் விழிப்புணர்வு முகாம்

தாராபுரத்தில் விழிப்புணர்வு முகாம்

தாராபுரம், தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில், புகையிலை மற்றும் போதை விழிப்புணர்வு முகாம், என்.சி.பி. நகராட்சி மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் பாஸ்கர் வரவேற்றார்.குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பாண்டி மகாராஜா முன்னிலை வகித்தனர். சார்பு நீதிபதியும், வட்ட சட்டப் பணிகள் குழு தலைவருமான சக்திவேல், மாணவர்களிடையே, புகையிலை மற்றும் போதை பழக்கம் குறித்த அறிவுரைகளை வழங்கி பேசினார். விழிப்புணர்வு முகாமில் வழக்கறிஞர்கள், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சஜினி மற்றும் 300க்கும் மேற்பட்ட மாணவர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை