உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விழிப்புணர்வு கூட்டம்

விழிப்புணர்வு கூட்டம்

அந்தியூர்:அந்தியூர் அல்ட்ரா டெக் தொண்டு நிறுவனம் சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான கடன் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. அல்ட்ரா டெக் நிறுவனர் தண்டாயுதபாணி முன்னிலை வகித்தார். மேலாண்மைக் குழு உறுப்பினர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். இளநிலை பொறியாளர் அருண்குமார், எஸ்.சி., எஸ்.டி., திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்கள் மற்றும் மானிய விவரங்கள் குறித்து விளக்கினார். கடன் ஆலோசகர் நாகராஜன், வங்கிகளிடமிருந்து விரைவாக கடன் ஒப்புதல் பெறும் நடைமுறை குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில், வங்கி மேலாளர்கள், அல்ட்ரா பணியாளர்கள் உள்பட, 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !