உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / துாய்மை சேவை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

துாய்மை சேவை குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

கோபி :கோபி நகராட்சி சார்பில், துாய்மை சேவை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம், கோபியில் நேற்று நடந்தது.கோபி பஸ் ஸ்டாண்டில் துவங்கிய ஊர்வலத்தை, கோபி நகராட்சி சேர்மன் நாகராஜ் துவக்கி வைத்தார். கமிஷனர் சுபாஷினி தலைமை வகித்தார். துப்புரவு அலுவலர் ரவிச்சந்திரன், துப்புரவு ஆய்வாளர்கள் நிருபன் சக்கரவர்த்தி, சவுந்திரராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். தனியார் கல்லுாரி மாணவியர், சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். குப்பையை தரம் பிரித்து வழங்குவது, மரம் நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கோபி பஸ் ஸ்டாண்டில் துவங்கிய ஊர்வலம், சிக்னல் வழியாக மீண்டும் பஸ் ஸ்டாண்டை அடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை