உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

காங்கேயம் காங்கேயம் போலீசார் சார்பில், தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்து விளக்கும் வகையில், விழிப்புணர்வு பேரணி நடந்தது. காங்கேயம் அரசு அறிவியல் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்ட பேரணியை, கல்லுாரி முதல்வர் ஜெயந்தி துவக்கி வைத்தார்.நத்தக்கடையூர் அரசு பள்ளி முதல் நத்தக்காடையூர் வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தகவல் பெறும் உரிமை சட்டத்தால் கிடைக்கப்பெறும் தகவல், நன்மை குறித்து எடுத்து கூறப்பட்டது. காங்கேயம் எஸ்.ஐ., கபில்தேவ், சரவணன், அரசு கல்லுாரி மற்றும் தனியார் கல்லுாரி மாணவ, மாணவியர் என, 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை