உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அசோலா தயாரிப்பு பயிற்சி விளக்கம்

அசோலா தயாரிப்பு பயிற்சி விளக்கம்

காங்கேயம்: காங்கேயம் வட்டார பகுதியில், அசோலா எனப்படும் தண்ணீரில் மிதக்கக் கூடிய பெரணி வகையை சேர்ந்த தாவரம் தயாரிப்பு, வளர்ப்பு முறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி தரப்பட்டது. கால்நடை மற்றும் கோழி தீவனமாகவும் பயன்படும் இந்த அசோலா வளர்ப்பு குறித்து, ஈரோடு மாவட்ட தனியார் வேளாண் கல்லூரி மாணவர்கள் பயிற்சி தந்தனர். அசோலா குறைந்த செலவுள்ள இடுபொருளாக கால்நடை வளர்ப்-பிலும், நெல் விளைச்சலில் இயற்கை உரமாக செயல்பட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. அசோலாவை பச்சையாகவோ அல்லது உலர் தீவனமாகவோ, கால்நடை மற்றும் கோழிகளுக்கு பயன்படுத்தலாம் என்பதையும் விளக்-கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை