வங்கி ஊழியர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு:ஸ்டேட் பாங்க் வங்கி ஊழியர் சங்கம் சார்பில், உதவி பொதுசெயலர் முகுந்தன் தலைமையில், ஈரோடு, எஸ்.பி.ஐ., சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் செய்தனர். தேசிய அளவில், ஸ்டேட் பாங்க்கில் உள்ள காலிப்பணியிடங்களையும், தமிழகத்தில் காலியாக உள்ள, 700 ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களை பணியமர்த்த வேண்டும். ஒப்பந்த ஊழியர்கள் பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்பது உட்பட, 16 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலர்கள் ராஜா, பிரபு, ஆறுமுகம், காயத்திரி, அர்ஜூன் உட்பட பலர் பங்கேற்றனர்.