உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானி கூடுதுறையில் 22 ஜோடிகளுக்கு டும்டும்

பவானி கூடுதுறையில் 22 ஜோடிகளுக்கு டும்டும்

பவானி:ஆவணி மாதம் முதல் சுப முகூர்த்த தினமான நேற்று, பிரசித்தி பெற்ற பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில், 22 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு குவிந்த உறவினர்களால், கோவில் வளாகம் களை கட்டியது. புது மண தம்பதியர் நீண்ட வரிசையில் தங்கள் குடும்பத்தினருடன் காத்திருந்து சங்கமேஸ்வரர், வேதநாயகியம்மனை தரிசனம் செய்து சென்றனர்.சென்னிமலையில்...சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், சுப முகூர்த்த தினமான நேற்று, 19 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இதனால் அதிகாலை, 4:30 மணிக்கே மலைக்கோவில் களை கட்ட தொடங்கி விட்டது. மங்கள நாதஸ்வர இசை, திருமணத் தம்பதிகள், அவர்களின் உறவினர்கள், கேமராமேன்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் கோவில் வளாகம் திருவிழா கோலம் பூண்டது. கூட்ட நெரிசலால் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் புதுமண தம்பதிகள் பலர், திருமணக் கோலத்துடனும் மலைப்பாதையில் நடந்து சென்று தங்கள் வாகனங்களை தேடி அலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை