உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானிசாகர் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு 102 அடியை எட்டியதும் உபரிநீர் திறப்பு

பவானிசாகர் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு 102 அடியை எட்டியதும் உபரிநீர் திறப்பு

புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் அணையில், 105 அடி உயரத்துக்கு நீர் தேக்கலாம். தற்போது அணை நீர்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி மலைப்பகுதியில் மழை கொட்டுகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் நீர்வரத்து, 11 ஆயிரத்து, 667 கன அடியாக இருந்தது. நேற்று காலை, 29 ஆயிரத்து, 113 கன அடியாக அதிகரித்தது. இதனால் நேற்று முன்தினம், 99.54 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று ஒரே நாளில் இரண்டு அடி உயர்ந்து, 101.54 அடியானது. அணையில் இருந்து பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில், 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.வெள்ள அபாய எச்சரிக்கைபவானிசாகர் அணை மொத்த நீர்மட்டம், 105 அடி என்றாலும், அக்டோபர் மாதம் வரை, 102 அடி வரை மட்டுமே நீர் தேக்க முடியும். இதனால் நீர்மட்டம், 102 அடியை எட்டியவுடன் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படும். இதனால் முன்கூட்டியே பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விட முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ