மேலும் செய்திகள்
'கோல் போஸ்ட்' விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு
02-Feb-2025
பவானி: சேலம் மாவட்டம் மேட்டூர், பி.என்.பட்டியை சேர்ந்தவர் சிவகுமார், 45; கூலி தொழிலாளி. இவரது மனைவி வனிதா, 41; தம்பதியரின் மகன் பிரசித், 3; டி.வி.எஸ்., விக்டர் பைக்கில், கோபியில் உள்ள மாமனார் வீட்டுக்கு மூவரும் நேற்று சென்றனர். அம்மாபேட்டை அடுத்த பூனாச்சி அருகே சென்றபோது, சிவக்குமாருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டது. இதனால் பைக் நிலை தடுமாறியதில் மூவரும் சாலையில் விழுந்தனர். இதில் வனிதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற இருவரும் லேசான காயம் அடைந்தனர். அப்பகுதியினர் வனிதாவை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில் வனிதா ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Feb-2025