உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நீலகிரி எம்.பி., மீது பா.ஜ.,வினர் புகார்

நீலகிரி எம்.பி., மீது பா.ஜ.,வினர் புகார்

ஈரோடு, மத்திய உள்துறை அமைச்சரை அநாகரிகமாக, அவதுாறு ஏற்படுத்தும் வகையில் பேசிய, நீலகிரி எம்.பி., ராசா மீது குற்றவியல் நடவடிக்கை கோரி, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், பா.ஜ.,வினர் நேற்று மனு அளித்தனர். ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் செந்தில், எம்.எல்.ஏ., சரஸ்வதி தலைமையில் எஸ்.பி., சுஜாதாவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:சென்னையில் கடந்த தி.மு.க., பூத் செயற்குழு கூட்டத்தில், நீலகிரி எம்.பி., ராசா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவதுாறாக பேசியுள்ளார். எனவே ராசா மீது 356, 131, 194 & 195 பி.என்.எஸ்., ஆகிய பிரிவுகளில் குற்றவியல் நடவடிக்கை எடுத்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை