உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பா.ஜ.,வினர் சுதந்திர தினவிழா ஊர்வலம்

பா.ஜ.,வினர் சுதந்திர தினவிழா ஊர்வலம்

தாராபுரம், சுதந்திர தினத்தையொட்டி, பா.ஜ.க.வினர் தேசியக்கொடி ஏந்தி தாராபுரத்தில் நேற்று ஊர்வலமாக சென்றனர். உடுமலை ரவுண்டானா அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு, திருப்பூர் மாவட்ட பொது செயலாளர் சுகுமார் தலைமை வகித்தார். மாவட்ட முன்னாள் பொருளாளர் சிவசுப்பிரமணியம் துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலத்தில் கவுன்சிலர் மீனாட்சி கோவிந்தசாமி, நிர்வாகிகள் கருப்புசாமி, ரமேஷ் உள்பட பலர் பங்கேற்றனர். பெரிய காளியம்மன் கோவில் அருகே ஊர்வலம் நிறைவடைந்தது. பேரணியில் சென்ற அனைவரும், தேசியக்கொடி ஏந்தியபடி, வந்தே மாதரம் என கோஷமிட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ