உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தமிழக அரசை கண்டித்து பா.ஜ.,- எம்.எல்.ஏ., ஆர்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து பா.ஜ.,- எம்.எல்.ஏ., ஆர்ப்பாட்டம்

ஈரோடு: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்தும், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறியதாக, தமிழக அரசை கண்டித்தும், தமிழக அரசு பதவி விலக கோரியும், ஈரோட்டில் பெரியார் நகரில் உள்ள தன் வீட்டு முன், மொடக்குறிச்சி பா.ஜ., - எம்.எல்.ஏ., சரஸ்வதி நேற்று காலை கண்ணில் கறுப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் தெற்கு மாவட்ட பா.ஜ., மகளிரணி தலைவி புனிதம் ஐயப்பன், மாவட்ட மகளிரணி பொது செயலாளர் நிரஞ்சனா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., உட்பட ஏழு பேர் மீது, டவுன் போலீசார் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை