பா.ஜ., மகளிரணி கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோடு: பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறிய தி.மு.க., அரசை கண்டித்து, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., மகளிரணி சார்பில், ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட மகளிரணி தலைவி சண்முகப்பிரியா தலைமை வகித்தார். பா.ஜ., தெற்கு மாவட்ட தலைவர் செந்தில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கருப்பணன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தாராபுரத்தில்...தி.மு.க., அரசை கண்டித்து, பா.ஜ., மகளிரணி சார்பில் தாராபுரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. திருப்பூர் மாவட்ட தலைவர் மோகனப்பிரியா தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் சுகுமார், அ.தி.மு.க., மாவட்ட அவைத் தலைவர் ராஜு, முன்னிலை வகித்தனர்.மாநில பொது செயலாளர் முருகானந்தம் பேசினார். பா.ஜ.,வினர் மற்றும் அ.தி.மு.க., - அ.ம.மு.க., - பா.ம.க., நிர்வாகிகள் உள்பட, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.