கோபி கிளை நுாலகத்துக்கு புத்தகங்கள் வருகை
கோபி, கோபி கிளை நுாலகத்துக்கு, 944 புத்தகங்கள் தற்போது புதியதாக வந்துள்ளது.கோபி வடக்கு பார்க் வீதியில் இயங்கும், கோபி கிளை நுாலகத்தில், ஒரு லட்சத்து, 15 ஆயிரத்து 378 புத்தகங்கள் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில், மாவட்ட மைய நுாலகத்தில் இருந்து, நாவல், நீதிக்கதைகள், வரலாறு, பொருளாதாரம், போட்டித்தேர்வு உள்ளிட்ட தலைப்புகளில் மொத்தம், 944 புத்தகங்கள் புதியதாக தற்போது வந்துள்ளது. அவைகளை பணியாளர்கள் வகைப்படுத்தி, நுாலகத்தின் பயன்பாட்டில் வரிசைப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.