கிணற்றில் மூழ்கிய சிறுவன் பலி
ஈரோடு:கள்ளக்குறிச்சி மாவட்டம், பழைய சிறுவாங்கூரை சேர்ந்தவர் மணி, 51. இவருக்கு மாலினி, 22, என்ற மகள், சசிபரத், 11, என்ற மகன் உள்ளனர். அனைவரும் கடந்த, 13 ஆண்டுகளாக நாமக்கல் மாவட்டம் கொக்கராயன்பேட்டையில் வசித்து வருகின்றனர். கரும்பு வெட்டும் வேலைக்கு மணி சென்று வருகிறார்.கடந்த, 28ல் அப்பகுதியில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் மணி வேலை செய்தபோது, சசிபரத்தை உடன் அழைத்து சென்றிருந்தார். அச்சிறுவன், அங்குள்ள கிணற்றில் கயிறை கட்டி நீச்சல் பழகினார். இடுப்பில் கட்டி இருந்த கயிறு அறுந்து, தண்ணீரை ஒட்டி தொங்கி கொண்டிருந்தார். தீயணைப்பு வீரர்கள் சிறுவனை இறந்த நிலையில் மீட்டனர்.மலையம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.