உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிணற்றில் குளித்தசிறுவன் மூழ்கி பலி

கிணற்றில் குளித்தசிறுவன் மூழ்கி பலி

ஈரோடு, விழுப்புரம் மாவட்டம் பழைய சிறுவாங்கூரை சேர்ந்தவர் மணி. கரும்பு வெட்டும் தொழிலாளி. குடும்பத்துடன் ஈரோடு மாவட்டம் பாசூர் அருகே வேங்கியாம்பாளையத்தில் தங்கி கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். வழக்கம்போல் நேற்று வேலை முடிந்து, மாலையில் வேங்கியாம்பாளையத்தைச் சேர்ந்த சின்னச்சாமி தோட்டத்து கிணற்றில் மணியின் மகன் சசி பரத், 11, குளித்தான். அப்போது தண்ணீரில் மூழ்கி மாயமானார். அருகில் இருந்தவர்கள் மீட்க முயன்றும் முடியவில்லை. தகவலின்படி சென்ற மொடக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் நீண்ட நேரத்துக்கு பிறகு சிறுவனை சடலமாக மீட்டனர். மலையம்பாளையம் போலீசார் உடலை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை