உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோர்ட் உத்தரவுப்படி போக்குவரத்து சீரமைப்பு பணியில் சிறுவன்

கோர்ட் உத்தரவுப்படி போக்குவரத்து சீரமைப்பு பணியில் சிறுவன்

ஈரோடு: மொடக்குறிச்சியை சேர்ந்த, 14 வயது சிறுவன், 2021ல் பைக் ஓட்டிச் சென்றபோது, 60 வயது பெண் மீது மோதியதில் இறந்தார். மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு ஈரோடு இளம் சிறார் நீதி குழும முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. இளம் சிறார் நீதி சட்டத்தின்படி முதற்கட்டமாக ஜூலை, 18, 19, 20, 26, 27 மற்றும் ஆக.,1, 2, 3, 8, 9, 10 தேதிகளில், காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, போலீசாருடன் இணைந்து போக்குவரத்து சீரமைப்பு பணியை, சிறுவன் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இதன்படி சீரமைப்பு பணியில் சிறுவன் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !