உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஈரோடு பி.எஸ்.என்.எல்., அலுவலக வளாகத்தில், பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள்-ஓய்வூதியர்கள்--ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டமைப்பு தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் பாலு, பழனிசாமி முன்னிலை வகித்தனர். பி.எஸ்.என்.எல்., மொபைல் சேவை, டேட்டா சேவை தரத்தை உயர்த்த வேண்டும். 4ஜி சேவையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, தரமான 4ஜி சேவை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓய்வூதியர் சங்கங்களின் நிர்வாகிகள் பரமேஸ்வரன், பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ