வாய்க்காலில் விழுந்து வியாபாரி தற்கொலை
பெருந்துறை:பெருந்துறையை அடுத்த பெருமாபாளையம், மஞ்சு நகரை சேர்ந்தவர் சரவணன், 40; மனைவி, ஆறு மாதத்தில் இரட்டை பெண் குழந்தை உள்ளது. குடிசை தொழிலாக இனிப்பு பலாகாரம் தயாரித்து விற்பனை செய்து வந்தார். சொந்த வீடு கட்டியதில் கடனாகி விட்டது. மேலும், தொழிலுக்காக சிறுக சிறுக பணம் வாங்கியதிலும் கடன் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த, ௧௨ம் தேதி மாலை மொபட்டில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பெருந்துறை அடுத்த பாலக்கரை கீழ்பவானி வாய்க்கால் கரை அருகில் சரவணன் மொபட் நேற்று கிடந்தது. பெருந்துறை அருகே வாய்க்காலில் பிணமாக கிடத்தார். கடன் தொல்லையால் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று, பெருந்துறை போலீசார் தெரிவித்தனர்.